இந்தியாவின் பெருமை

டோக்கியோவில் தமிழர்கள்

இந்தியா பங்கேற்கும் நிகழ்வுகள்

122 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட வட்டத்தின் மையத்தில்/மையம் அருகில் அம்பை செலுத்துவதே அம்பு எறிதலின் முறையாகும். வீரர்/வீராங்கனைக்கு 70M தொலைவில் குறி அமைந்திருக்கும்.

ஒற்றையர்

இரு போட்டியாளர்களும் ஒரு சுற்றில் (set) தலா மூன்று முறை அம்பை எய்வார்கள், சிறப்பாக எய்பவர் சுற்றை வென்று இரு புள்ளிகள் பெறுவார். செட் சமன் செய்யப்பட்டால் இருவரும் தலா ஒரு பாயிண்ட் எடுத்து கொள்வார்கள். முதலில் ஆறு பாயிண்ட் பெறுபவர் போட்டியில் வென்றவர் ஆவார். இது best of five முறையில் நடக்கும் போட்டியாகும். ஐந்து சுற்றுக்கு பின்னர் போட்டி சமன் செய்யபப்பட்டால் shoot-off (தலா ஒரு அம்பை செலுத்த வேண்டும்) முறையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மிக்ஸ்டு மற்றும் இரட்டையர்

மிக்ஸ்டு மற்றும் இரட்டையர் பிரிவும் இதே சுற்று முறையில் நடத்தப்படும். மூன்று அம்புகளுக்கு பதிலாக ஆறு அம்புகள் ஒரு அணிக்கு கொடுக்கப்படும். சமன் செய்யப்பட்டால் இரு அணியின் நால்வரும் தலா ஒரு அம்பை செலுத்த அதிக புள்ளிகள் பெரும் அணி வெற்றிபெறும்.

போட்டியாளர் நிகழ்வு ரேங்கிங் ரெகார்ட் 64 சுற்று 32 சுற்று 16 சுற்று கால் இறுதி அரை இறுதி பதக்கப்போட்டி
ஸ்கோர் சீடு ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்)
அதானு தாஸ் ஆண்கள் ஒற்றையர் 653 35 W 6-4
(டெங் யு-செங் - சீன தைஃபே)
W6-5
(ஓ ஜின்யெக் - தென் கொரியா)
L 4-6
(தகஹரு பிருகவா - ஜப்பான்)
முன்னேறவில்லை
தரூண்தீப் ராய் 656 31 W 6-4
(ஒலேக்சீ ஹன்பின் - உக்ரைன்)
L 5-6
(இட்டே ஷன்னி - இஸ்ரேல்)
முன்னேறவில்லை
பிரவீன் ஜாதவ் 652 37 W 6-0
(கால்சன் பஜர்ஷாபோ - ரஷ்யா)
L 0-6
(பிரேடி எல்லிஸ் - அமெரிக்கா)
அதானு தாஸ் ஆண்கள் டீம் 1961 9 N/A W 6-2
(கஜகஸ்தான்)
0-6( கிம் டே/ ஜாக் கிம்/ வூஜின் ஒத் ) முன்னேறவில்லை
பிரவீன் ஜாதவ்
தரூண்தீப் ராய்
தீபிகா குமாரி பெண்கள் ஒற்றையர் 663 9 W 6-0
(கர்மா - பூடான்)
W 6-4
(முசினோ-பெர்னாண்டஸ் - அமெரிக்கா)
W 6-5
(செனியா பெரோவா - ரஷ்யா)
L 0-6
(ஷான் அன் - தென் கொரியா)
பிரவீன் ஜாதவ் மிக்ஸ்டு டீம் 1319 9 N/A W 5-3
(சீன தாய்பே)
அன் சான்/கிம் டி ஜாக்
(கொரியா)
2-6
தீபிகா குமாரி

ஆண்கள் 400மீ ஹர்டுல்ஸ்

தடைகளை தாண்டி இலக்கை முதலில் அடைபவர் வெற்றி பெறுவர்.

4x400மீ ஆண்கள் மிக்ஸ்டு ரிலே

இரு ஆண்கள் இரு பெண்கள் கலந்துகொள்ளும் போட்டி இது. ஹீட்ஸ் சுற்றில் வெற்றி பெறும் அணி பின்னர் அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுக்கு செல்லும்.

ஆண்கள் 20கிமீ ரேஸ் வால்க்

போட்டியாளர்கள் கால்களை தரையில் வைத்தபடியே இலக்கை அடையும் வரை நடக்க வேண்டும். ஒரு கால் முன்செல்லும் வரை அடுத்த கால் நேராக இருக்க வேண்டும்.

3000மீ ஸ்டீபிள்சேஸ்

போட்டியாளர்கள் 36 inches உயரம் உள்ள தடைகளை தாண்ட வேண்டும். முதலில் போட்டியை முடிப்பவர் வெற்றியாளர்.

பெண்கள் 20கிமீ ரேஸ் வால்க்

போட்டியாளர்கள் கால்களை தரையில் வைத்தபடியே போட்டி முடியும் வரை நடக்க வேண்டும். ஒரு கால் முன்செல்லும் வரை அடுத்த கால் நேராக இருக்க வேண்டும்.

ஆண்கள் ஜாவலின் த்ரோ

2.6 மீட்டர்லிருந்து 2.7 மீட்டர் உயரம் கொண்ட ஈட்டி பயன்படுத்தப்படும். அதிக தூரம் ஈட்டி எறியும் போட்டியாளர் வெற்றி பெறுவார். ஈட்டிமுனை முதலில் தரையில் படும் எறிதலே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இறுதி சுற்றுக்கு 12 போட்டியாளர்கள் தகுதி பெறுவர். அதில் வெகு தூரம் எறிபவர் வெற்றியாளர்.

ஆண்கள் லாங் ஜம்ப்

போட்டியாளர் ஒரு பலகையில் காலை வைத்து அதிக தூரம் குதிக்க வேண்டும். அதிக தூரம் சென்றவர் வெற்றிப்பெறுவார். பவுல் லைனில் (foul line) கால்படும் வகையில் தாண்டும் வீரர்களின் தூரம் நிராகரிக்கப்படும்.

குண்டு எறிதல்

ஒரு இரும்பு குண்டை எவ்வளவு தூரம் எறிய முடியும் என்பதை பார்க்கும் விளையாட்டே குண்டு எறிதல் ஆகும். இரும்பு குண்டை அதிக தூரம் வீசும் வீரர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். பொதுவாக குண்டு எறிதல் போட்டியில் ஆண்கள் பிரிவில் 7.26 கிலோ எடை கொண்ட குண்டும், பெண்கள் பிரிவில் 4 கிலோ எடை கொண்ட குண்டும் பயன்படுத்தப்படுகிறது. குண்டு எறிபவர் 7 அடி வட்டத்திற்குள் நின்று குண்டு எறிய வேண்டும். வட்டத்தை விட்டு வெளியேறினால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. குண்டு எறியும்பொழுது போட்டியாளர் தனது கையை கழுத்திற்கு நேர் வெளியே வீசி எறிய வேண்டும்.

பெண்கள் டிஸ்கஸ் த்ரோ

இப்போட்டியில் 18 செ.மீ. விட்டம் கொண்ட வட்டை யார் வெகு தொலைவில் வீசுகிறார்களோ அவர்கள் வெற்றிபெறுவார்கள். தட்டின் மேல் பகுதியை தொட்டால் மற்றும் போட்டியாளர் தங்களின் வட்டத்திற்கு வெளியே சென்றால் பவுல் என்று அறிவிக்கப்படும்.

போட்டியாளர் நிகழ்வு தகுதிச்சுற்று இறுதிச்சுற்று
முடிவு ரேங்க் முடிவு ரேங்க்
எம்.பி.ஜபீர் ஆண்கள் 400மீ ஹர்டுல்ஸ் 50.77 33 முன்னேறவில்லை
முகமது அனாஸ் ஆண்கள் 4x400மீ ரிலே 3:00:25 9 முன்னேறவில்லை
நோவா நிர்மல் டாம்
நாகநாதன் பாண்டி
அமோஜ் ஜேக்கப்
ஆரோக்கிய ராஜீவ்
சர்தாக் பாம்ப்ரி 4x400மீ மிக்ஸ்டு ரிலே 3:19.93 15 முன்னேறவில்லை
அலேக்ஸ் அந்தோனி
சுபா வெங்கடேசன்
ரேவதி வீரமணி
தனலெட்சுமி சேகரன்
சந்தீப்குமார் ஆண்கள் 20கிமீ ரேஸ் வால்க் முன்னேறவில்லை 1:25.07 23
ராகுல் ரோஹிலா 1:32.06 47
இர்பான் கொலோதம் தோடி 1:34.31 51
குர்பிரீத் சிங் ஆண்கள் 50கிமீ வால்க் முடிக்கவில்லை
அவினாஷ் சப்ளே ஆண்கள் 3000மீ ஸ்டீபிள்சேஸ் 8:18.12 13 முன்னேறவில்லை
டூட்டி சந்த் பெண்கள் 100மீ 11.54 45
டூட்டி சந்த் பெண்கள் 200மீ 23.85 38
பிரியங்கா கோஸ்வாமி பெண்கள் 20கிமீ ரேஸ் வால்க் N/A 1:32:36 17
பாவனா ஜாட் 1:37:38 32
நீரஜ் சோப்ரா ஆண்கள் ஜாவலின் த்ரோ 86.65 மீ 1 87.58 1
சிவபால் சிங் 76.4 மீ 27 முன்னேறவில்லை
அன்னு ராணி பெண்கள் ஜாவலின் த்ரோ 54.04 மீ 29
முரளி ஸ்ரீசங்கர் ஆண்கள் லாங் ஜம்ப் 7.69 மீ 25
தஜின்தர்பால் சிங் டோர் ஆண்கள் ஷாட்புட் 19.99 மீ 24
கமல்பிரீத் கவூர் பெண்கள் டிஸ்கஸ் த்ரோ 64 மீ 2 63.7 6
சீமா புனியா 60.57 மீ 16 முன்னேறவில்லை

மூன்றில் இரு சுற்றுகளை கைப்பற்றும் வீரர்/வீராங்கனை போட்டியை வெல்வர். ஒற்றையர் , இரட்டையர் , மிக்ஸ்டு இரட்டையர் என அனைத்து பிரிவிகளுக்கும் இதுவே விதிமுறை. ஆட்டம் 20-20 என சமன் செய்யப்பட்டால், அதன்பின் இரண்டு புள்ளிகள் வித்தியாசம் பெற்றால்தான் வெற்றிபெற முடியும். 29-ல் போட்டி சமன் செய்யப்படுமேயானால் 30 பாயின்ட் முதலில் பெரும் போட்டியாளரோ அல்லது அணியோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

போட்டியாளர் நிகழ்வு குழு நிலை எலிமினேட்டர் கால் இறுதி அரை இறுதி பதக்கப்போட்டி
ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ரேங்க் ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்)
சாய் பி பிரனீத் ஆண்கள் ஒற்றையர் L 0-2
(மிஷா சில்பெர்மன் - இஸ்ரேல்)
L 0-2
(மார்க் ஹால்ஜவ் - நெதர்லாந்து)
N/A 3 முன்னேறவில்லை
சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆண்கள் இரட்டையர் W 2-1
(சீன தைபே)
L 0-2
(இந்தோனேசியா)
W 2-0
(இங்கிலாந்து)
3
சிராக் ஷெட்டி
பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் W 2-0
(செனியா பெரிலிகர்போவா - இஸ்ரேல்)
W 2-0
(நான் யி செங் - ஹாங் காங்)
N/A 1 W 2-0
(மியா பிலிசெல்ட் - டென்மார்க்)
W 2-0
(அகானே யமாகுச்சி - ஜப்பான்)
L 0-2
(தை சூ-யிங் - சீன தைபே)
W 2-0
(ஹி பிங் ஜியாவோ - சீனா)
வெண்கலம்

தலா மூன்று நிமிடங்கள் கொண்ட மூன்று சுற்றுக்கள் கொண்ட போட்டியே பாக்சிங். அதிக புள்ளிகள் பெறும் வீரர் வெற்றி பெறுவார். தலையில் மற்றும் கழுத்துக்கு கீழ் இடுப்புக்கு மேல் குத்தினால் புள்ளிகள் கொடுக்கப்படும். தலையின் பின்புறம் மற்றும் இடுப்புக்கு கீழ் அடிப்பது விதிகளுக்கு புறம்பாகும்.

போட்டியாளர் நிகழ்வு 32 சுற்று 16 சுற்று கால் இறுதி அரை இறுதி பதக்கப்போட்டி
மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) ரேங்க்
அமித் பங்கல் ஆண்கள் 52 கிலோ பை L 1-4
(யுபர்ஜீன் ஹென்ரி - கொலம்பியா)
முன்னேறவில்லை 9
மனீஷ் கவுசிக் ஆண்கள் 63 கிலோ L 1-4
(லூக் மேக்கோர்மாக் - கிரேட் பிரிட்டன்)
முன்னேறவில்லை 17
விகாஷ் கிரிஷன் ஆண்கள் 69 கிலோ L 0-5
(குவின்சி ஒக்காகவா - ஜப்பான்)
17
ஆஷிஷ் குமார் ஆண்கள் 75 கிலோ L 0-5
(ஏர்பிக் டுஹெட்டா - சீனா)
17
சதீஷ் குமார் ஆண்கள் +91 கிலோ பை W 4-1
(ரிக்கார்டோ பிரௌன் - ஜமைக்கா)
L 0-5
(பஹதீர் ஜலோலோவ் - உஸ்பெகிஸ்தான்)
முன்னேறவில்லை 5
மேரி கோம் பெண்கள் 51 கிலோ W 4-1 (மிகெலீனா ஹெர்னான்டஸ் - டொமினிக்கன் ரிபப்ளிக்) L 2-3
(இங்கிரிட் வாலென்சியா - கொலம்பியா
முன்னேறவில்லை 9
சிம்ரஞ்சித் கவூர் பெண்கள் 60 கிலோ பை L 0-5
(சுடாபோர்ன் சீசோண்டீ - தாய்லாந்து)
9
லோவ்லினா போர்கோஹைன் பெண்கள் 69 கிலோ பை W 3-2
(நடின் அபேட்ஸ் - ஜெர்மனி)
L 4-1
(நியன் ஷின் ஜேன் - சீன தைபே)
L 0-5
(புசேனாஸ் சுர்மேனெலி - தரகி)
முன்னேறவில்லை 3
பூஜா ராணி பெண்கள் 75 கிலோ N/A W 5-0
(இச்ராக் செயிப் - அல்ஜீரியா)
L 0-5
(புசேனாஸ் சுர்மேனெலி - தரகி)
முன்னேறவில்லை 5

ஈகுவெஸ்டேரியன் போட்டிகள் மூன்று வகைப்படும். அவை ஸ்டேடியம் ஜம்பிங் (Stadium Jumping), ட்ரெஸ்ஸஜ் (Dressage) மற்றும் கிராஸ் கண்ட்ரி ஜம்ப்ஸ் (Cross Country Jumps). கிராஸ் கண்ட்ரி ஜம்ப்ஸ் போட்டியில், போட்டியாளர் குதிரை மீது அமர்ந்த நிலையில் தொடர்ந்து சில குதியல்கள் செய்ய வேண்டும், எந்தவித தவறுகளும் இல்லாமல் இதை செய்ய வேண்டும். ட்ரெஸ்ஸஜ் போட்டியில் குதிரையின் கீழ்ப்படிதல் (Obedience), வளைவுத்தன்மை (Suppleness), துல்லியம் (Accuracy), மனப்பாங்கு (Attitude) மற்றும் போட்டியாளர் உக்தி அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். கிராஸ் கண்ட்ரி ஜம்பிங்க்கை பொறுத்தமட்டில் குதிரையின் மீது சவாரி செய்யும் போட்டியாளர்களின் வேகம் (Speed), குதியல் திறன் (Jumping Ability) மற்றும் தாங்கும் திறன்(Endurance) அனைத்தையும் கணக்கிடும் பொருட்டு தடைகளை தாண்டி குதிக்கவேண்டும்.

குதித்தல்
போட்டியாளர் குதிரை நிகழ்வு டிரஸ்ஸேஜ் கிராஸ் கண்ட்ரி தகுதி இறுதிச்சுற்று மொத்தம்
பெனால்டி ரேங்க் பெனால்டி மொத்தம் ரேங்க் பெனால்டி மொத்தம் ரேங்க் பெனால்டி மொத்தம் ரேங்க் பெனால்டி ரேங்க்
பவூத் மிர்சா செய்க்னர் ஒற்றையர் 28 9 11.20 39.20 22 8 47.2 25 12.4 59.6 23 59.6 23

வாள்வீச்சு சண்டை போட்டி இரண்டு பகுதிகளாக நடைபெறும். மோதும் இரண்டு வீரர்கள் அல்லது வீராங்கனைகளில் யாராவது ஒருவர் முதலாவதாக 8 புள்ளிகள் பெற்றதும் இடைவேளை அறிவிக்கப்படும். அதன்பின் 2-வது பாதி ஆட்டம் நடைபெறும். 15 புள்ளிகள் அல்லது அதிக புள்ளிகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். சப்ரே பிரிவில் தலை மற்றும் கைகளை இலக்காக வைத்து தாக்கலாம். எலக்ட்ரானிக் முறையில் ஸ்கோர் வழங்கப்படும்.

போட்டியாளர் நிகழ்வு 64 சுற்று 32 சுற்று 16 சுற்று கால் இறுதி அரை இறுதி பதக்கப்போட்டி
ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்)
பவானி தேவி பெண்கள் சப்ரே W 15-3
(நதியா பென் அஸீஸி - துனிசியா)
L 7-15
(மனோன் ப்ருனேட் - பிரான்ஸ்)
முன்னேறவில்லை

மேட்ச் ப்ளே (Match Play) மற்றும் ஸ்ட்ரோக் ப்ளே (Stroke Play) என்று கோல்ஃப் போட்டி இரண்டு விதமாக பிரிக்கப்படும். ஆனால் ஒலிம்பிக்கில் ஸ்ட்ரோக் ப்ளே முறையே பின்பற்றப்படுகிறது. இது இரு பாலினர்களுக்கும் பொருந்தும். ஸ்ட்ரோக் ப்ளே அடிப்படையில் ஒரு வீரர்/வீராங்கனை 18 துளைகளுக்கு (hole) மொத்தம் நான்கு முறை சக போட்டியாளர்களுடன் போட்டியிடுவார்கள். நான்கு சுற்றுகள் நிறைவில் இருப்பதிலியே யார் குறுகிய அடிகளில் (strokes) பந்தை துளைகளில் செலுத்தினார்களோ அவர்தான் வெற்றிபெற்றவர் ஆவார்.

போட்டியாளர் நிகழ்வு சுற்று 1 சுற்று 2 சுற்று 3 சுற்று 4 மொத்தம்
ஸ்கோர் ஸ்கோர் ஸ்கோர் ஸ்கோர் ஸ்கோர் பார் ரேங்க்
அனிர்பன் லஹிரி ஆண்கள் ஒற்றையர் 67 72 68 72 279 -5 42
உதயன் மேன் 76 69 70 72 287 3 56
அதிதீ அஷோக் பெண்கள் ஒற்றையர் 67 66 68 68 269 -15 4
திக்‌ஷா டகர் 76 72 72 70 290 6 T50

1881-ம் ஆண்டில், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு, அமைப்பு ரீதியான ஒரு விளையட்டாக உருவெடுத்தது. இந்த ஆண்டில் ஐரோப்பிய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளுக்கான விதிகள் உருவாக்கப்பட்டன. நாளடைவில் இந்த அமைப்பு சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பாக மாற்றப்பட்டது. 1896-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன்முதலாக ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி அறிமுகமானது. இருப்பினும் 1920-ம் ஆண்டுவரை பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக்கில் நாம் இப்போது காணும் பல்வேறு விதமான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் 1956-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் பொதுவாக ஆண்கள், பெண்கள் என பிரிக்கப்படுகிறது. ஆண்கள் போட்டியில் ஃப்ளோர் எக்சர்சைஸ், ஸ்டில் ரிங்ஸ், வால்ட், பேரலல் பார்ஸ், ஹரிஜோன்டல் பார் விளையாட்டுகள் அடங்கும்.

பெண்கள் போட்டியில் வால்ட், அன்ஈவன் பார்ஸ், பேலன்ஸ் பீம், ஃப்ளோர் எக்சர்சைஸ் விளையாட்டுகள் அடங்கும்.

போட்டியாளர் நிகழ்வு தகுதிச்சுற்று இறுதிச்சுற்று
அப்பரேட்டஸ் மொத்தம் ரேங்க் அப்பரேட்டஸ் மொத்தம் ரேங்க்
V UB BB F V UB BB F
பிரனதி நாயக் பெண்கள் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் 13.466 9.033 9.433 10.6333 42.565 79 முன்னேறவில்லை

தலா பதினோரு நபர்கள் கொண்ட இரு அணியும் நான்கு கால்பகுதிகளாக (4 quarters) விளையாட வேண்டும். பந்தை நீள மட்டையை கொண்டு வலைக்குள் கோல் கீப்பரை மீறி அடிக்க வேண்டும். ஒவ்வொரு கால்பகுதி நடுவே இரு நிமிட ஓய்வளிக்கப்படும். அதிக கோல்கள் அடிக்கும் அணி வெற்றி பெறும்.

ஆண்கள் ஹாக்கி

பி ஆர் ஸ்ரீஜீஸ், ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோகிதாஸ், பிரேந்திரா லாக்ரா, ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட சர்மா, சுமித், ஷம்ஷர் சிங், தில்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், ல‍லித் குமார் உப்பத்யாய், மந்தீப் சிங்

பெண்கள் ஹாக்கி

சவிதா, தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதன், குர்ஜித் கவூர், உதிதா, நிஷா, நெகா, சுஷீலா சானு புக்ராம்பம், மோனிகா, நவ்ஜோத் கவூர், சலிமா தேதி, ராணி, நவ்நீத் கவூர், லால்ரேம்சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிலா தேவி

அணி நிகழ்வு குழு நிலை கால் இறுதி அரை இறுதி பதக்கப்போட்டி
ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ரேங்க் ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ரேங்க்
இந்தியா ஆண்கள் W 3-2
நீயூஸிலாந்து
L 1-7
ஆஸ்திரேலியா
W 3-0
ஸ்பெயின்
W 3-1
அர்ஜண்டினா
W 5-3
ஜப்பான்
2 W 3-1
கிரேட் பிரிட்டன்
L 2-5
பெல்ஜியம்
W 4-3
ஜெர்மனி
3
பெண்கள் L 1-5
நெதர்லாந்து
L 0-2
ஜெர்மனி
L 1-4
பிரிட்டன்
L 1-0
அயர்லாந்து
W 4-3
தென் ஆப்பிரிக்கா
2 W 1-0
ஆஸ்திரேலியா
L 1-2
அர்ஜென்டினா
L 3-4
பிரிட்டன்
4

ஜூடோ 19 நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது. எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, மல்லர் பிடி பிடித்து எதிரியைப் பணியவைப்பது, நகர முடியாமல் திணறவைத்து பணியவைப்பது என பல்வேறு நுணுக்கங்களைப் பயன்படுத்தி எதிரியை தோற்கடிக்கலாம். ஜுடோவில் ஆயுதங்கள் பயன்பாடு இல்லை. 7 வகை எடை பிரிவில் நடக்கும் இந்த போட்டியில், ஒவ்வொரு சுற்றுக்கும் 4 நிமிடங்கள் வழங்கப்படும். புள்ளிகள் அடிப்படையில் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும்.

போட்டியாளர் நிகழ்வு 32 சுற்று 16 சுற்று கால் இறுதி அரை இறுதி பதக்கப்போட்டி
ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ஸ்கோர் (எதிர்போட்டியாளர்) ரேங்க்
சுஷீலா லிக்மாபம் பெண்கள் 48 கிலோ L 0-1
(ஏவா செர்னோவிஸ்கி - ஹங்கேரி)
முன்னேறவில்லை

முதலில் இலக்கை சென்றடைபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

ஆண்களின் எடை 72.5 கிலோ மிகாமலும் சராசரி எடை 70 கிலோ மிகாமலும், பெண்களின் எடை 59 கிலோ மிகாமலும் சராசரி எடை 57 கிலோ மிகாமலும் இருத்தல் தகுதி பெற அவசியம்.

போட்டியாளர் நிகழ்வு ஹீட்ஸ் ரெபிசார்ஜ் ரெபிசார்ஜ் பதக்கப்போட்டி
நேரம் ரேங்க் நேரம் ரேங்க் நேரம் ரேங்க் நேரம் ரேங்க்
அர்ஜூன் லால் ஆண்கள் லைட் வெயிட் டபுள் ஸ்கல்ஸ் 6:40.33 5 6.51.36 3 6:24.41 6 6:29.66 11
அரவிந்த் சிங்

இப்போட்டியில் குறைந்த புள்ளிகள் முறையில் (low scoring system) வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலில் வருபவருக்கு ஒரு புள்ளி, இரண்டாவது வருபவருக்கு இரண்டு புள்ளிகள் என்கிற அடிப்படையில் புள்ளிகள் அளிக்கப்படும். இறுதி சுற்றில் அவரவர் வரிசைக்கு ஏற்றார் போல இரு மடங்கு புள்ளிகள் வழங்கப்படும்.

போட்டியாளர் நிகழ்வு ரேஸ் நிகர புள்ளிகள் இறுதி தரவரிசை
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 M*
விஷ்ணு சரவணன் ஆண்கள் லேசர் 14 20 24 23 22 12 27 23 3 15 N/A EL 156 20
கே.சி. கணபதி ஆண்கள் 49 இஆர் 18 18 17 19 14 5 17 11 15 16 9 14 EL 154 17
வருண் தக்கர்
நேத்ரா குமணன் பெண்கள் லேசர் ரேடியல் 33 16 15 40 32 38 22 20 37 38 N/A EL 251 35

10மீ, 25மீ மற்றும் 50மீ தூரத்தில் இருக்கும் குறியை நோக்கி வீரர்/வீராங்கனைகள் சுடுவார்கள். ரைஃபிள், ஷாட்கன் மற்றும் பிஸ்டல் என பலரக போட்டிகள் உண்டு.

10மீ ஏர் பிஸ்டல்

10மீ தொலைவில் இருந்து சுட வேண்டும். தேர்வு சுற்றுக்கு 75 நிமிடங்களில் 60 முறை சுடும் வாய்ப்பு அளிக்கப்படும். இறுதிச்சுற்றில் எட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அதில் அனைவருக்கும் 24 முறை சுடும் வாய்ப்பு உண்டு. ஏர் பிஸ்டல் போட்டியில் ஒற்றைக்கையால் மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும்.

10மீ ஏர் ரைஃபிள்

ஏர் பிஸ்டல் போட்டியில் கைக்கு கொடுக்கப்படும் கட்டுப்பாடைத் தவிர மற்ற அனைத்து விதிகளும் இதற்கு பொருந்தும்.

25மீ ஏர் பிஸ்டல்

இது மகளிர்-மட்டும் போட்டி. 60 ஷாட்கள் 30-30 என்று இரண்டாக பிரிக்கப்படும். 30 பிரெஸிசன் ஷூட்டிங் மற்றும் 30 ராபிட் ஷூட்டிங் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இறுதி சுற்றில் rapid-fire முறையில் 4 சுற்றுகள் தலா 5 ஷாட்கள் என்கிற விகிதத்தில் நடக்கும்.

50மீ ஏர் ரைஃபிள்

இந்த போட்டி மூன்றாக பிரிக்கப்படும். போட்டியாளர்கள் மூன்று தளத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும். இவற்றை முட்டியிட்டு சுடுதல் (Kneeling), படுத்தநிலையில் சுடுதல் (Prone) மற்றும் நின்ற நிலையில் சுடுதல் (Standing) என்ற அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டும். தகுதி சுற்றில் ஒவ்வொரு நிலையிலும் 40 முறை என்று மொத்தம் 120 முறை சுட வேண்டும், பெண்கள் மூன்று நிலைகளிலும் தலா 20 முறை என்று 60 முறை சுடவேண்டும். இறுதி சுற்றில் மூன்றாக பிரித்து 45 முறை சுட வேண்டும், மூன்றாவது நிலையான நின்றபடி சுடும் நிலையில் 5 ஷாட்கள் எஞ்சியிருக்கும் பொழுது தரவரிசையில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள வீரர்கள் போட்டியில் தொடரும் தகுதியை இழப்பார்கள்.

ஸ்கீட்

ஸ்கீட் போட்டி நகரும் குறிகளை சுடும் போட்டியாகும். ஐந்து சுற்றுகளில் தலா 25 ஷாட்கள் கொண்டு இறுதி போட்டியாளர்கள் தேர்வாவார்கள். இறுதியில் போட்டியை கடுமைப்படுத்தும் பொருட்டு களிமண்ணால் ஆன குறிகளுக்கு வண்ணம் தீட்டப்படும். இந்த குறிகள் வெவ்வேறு உயரங்களிலிருந்து விண்ணில் செலுத்தப்படும்.

போட்டியாளர் நிகழ்வு தகுதிச்சுற்று இறுதிச்சுற்று
புள்ளிகள் ரேங்க் புள்ளிகள் ரேங்க்
திவ்யான்ஷ் சிங் பன்வார் ஆண்கள் 10மீட்டர் ஏர் ரைஃபிள் 622.8 32 தேர்வாகவில்லை
தீபக் குமார் 624.7 26 தேர்வாகவில்லை
அபூர்வி சந்தேலா பெண்கள் 10மீ ஏர் ரைஃபிள் 621.9 36 தேர்வாகவில்லை
இளவேனில் வளறிவன் 626.5 16 தேர்வாகவில்லை
சவுராப் சவுதாரி ஆண்கள் 10மீ ஏர் பிஸ்டல் 586 1 137.4 7
அபிஷேக் வர்மா 575 17 தேர்வாகவில்லை
மானு பாக்கர் பெண்கள் 10மீ ஏர் பிஸ்டல் 575 12 தேர்வாகவில்லை
யாஷாஸ்வினி சிங் தேஷ்வால் 574 13 தேர்வாகவில்லை
சஞ்சீவ் ராஜ்புத் ஆண்கள் 50மீ ரைஃபிள் 3 பொசிசன் 1157 32 தேர்வாகவில்லை
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 1167 21 தேர்வாகவில்லை
அன்ஜூம் மவுத்கில் பெண்கள் 50மீ ரைஃபிள் 3 பொசிசன் 1167 15 தேர்வாகவில்லை
தேஜஸ்வினி சவந்த் 1154 33 தேர்வாகவில்லை
மானு பாக்கர் பெண்கள் 25மீ பிஸ்டல் 582 15 தேர்வாகவில்லை
ராகி சர்நோபாட் 573 32 தேர்வாகவில்லை
அங்கத் பாஜ்வா ஆண்கள் ஸ்கீட் 120 18 தேர்வாகவில்லை
மைரஜ் அகமது கான் 117 25 தேர்வாகவில்லை
திவ்யான்ஷ் சிங் பன்வார் மிக்ஸ்டு டீம் 10மீ ஏர் ரைஃபிள் 313.3 12 தேர்வாகவில்லை
இளவேனில் வளறிவன் 313.2 12 தேர்வாகவில்லை
தீபக் குமார் 314.2 18 தேர்வாகவில்லை
அன்ஜூம் மவுத்கில் 311.4 18 தேர்வாகவில்லை
சவுராப் சவுதாரி மிக்ஸ்டு டீம் 10மீ ஏர் பிஸ்டல் 194 7 தேர்வாகவில்லை
மானு பாக்கர் 186 7 தேர்வாகவில்லை
அபிஷேக் வர்மா 283 17 தேர்வாகவில்லை
யாஷாஸ்வினி சிங் தேஷ்வால் 281 17 தேர்வாகவில்லை

பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக்

பட்டாம்பூச்சி இறக்கைகளை அடித்துக்கொள்வது போல அசைவுகள் செய்தபடியே நீச்சல் அடிப்பது ’பட்டர்ஃப்ளை’ வகை நீச்சல். அதாவது, இரண்டு கைகளும் ஒரே சமயத்தில் முன்னே வரவேண்டும். ஒரே சமயத்தில் பின்னே செல்லவேண்டும். இரண்டு தோள்களும் தண்ணீரில் ஒரே நேர்க்கோட்டில் இருக்கவேண்டும்.

பேக்ஸ்ட்ரோக்

மார்புப் பகுதி ஆகாயத்தைப் பார்த்திருப்பது போல வைத்துக் கொண்டு நீச்சலடிப்பது பேக்ஸ்ட்ரோக் (Backstroke). இப்படி நீச்சலடிக்கும்போது பாதம் தண்ணீருக்குள்ளேயே எப்போதும் இருக்கவேண்டும்.

ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்

ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் (Breaststroke) என்ற வகை நீச்சலில் கைகள் எப்போதும் தண்ணீர் மட்டத்துக்கு அடியிலேயே இருக்கவேண்டும். இரண்டு கால்களும் ஒரேமாதிரி அசைவுகளைத்தான் ஒரு சமயத்தில் தரவேண்டும்.

ஃப்ரீஸ்டைல்

எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நமக்கேற்ற வகையில் நீச்சலடிப்பது ஃப்ரீஸ்டைல் (Freestyle). இந்த வசதியின் காரணமாகவே மற்ற மூன்று பிரிவுகளை விட இந்தப் பிரிவில் பங்கெடுத்துக்கொள்பவர்கள் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்வார்கள்.

போட்டியாளர் நிகழ்வு ஹீட்ஸ் அரை இறுதி இறுதிச்சுற்று
நேரம் ரேங்க் நேரம் ரேங்க் நேரம் ரேங்க்
ஸ்ரீஹரி நடராஜ் ஆண்கள் 100மீ பேக்ஸ்ட்ரோக் 54.31 27 முன்னேறவில்லை
சஜன் பிரகாஷ் ஆண்கள் 200மீ பட்டர்ஃப்ளை 1:57.22 24
சஜன் பிரகாஷ் ஆண்கள் 200மீ பட்டர்ஃப்ளை 53.45 2
மானா படேல் பெண்கள் 100மீ பேக்ஸ்ட்ரோக் 1:05.20 39

ஒற்றையர் பிரிவு

டாஸில் யார் சர்விஸ் செய்வது என்பது தீர்மானிக்கப்படும். Best of seven sets முறையில் வெற்றியாளர்கள் தேர்வாவார்கள். முதலில் 11 புள்ளிகள் எடுப்பவர் அந்த செட்டை வெல்வார். 10-ல் சமன் செய்யப்படும் செட்டில் இரு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

இரட்டையர் பிரிவு

அணியில் இருவரும் சர்விஸ் செய்யலாம். இந்த போட்டி Best of five sets அடிப்படையில் நடக்கும்.

போட்டியாளர் நிகழ்வு முதல் சுற்று சுற்று 1 சுற்று 2 சுற்று 3 சுற்று 16 கால் இறுதி அரை இறுதி பதக்கப்போட்டி
மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) ரேங்க்
சத்தியன் ஞானசேகரன் ஆண்கள் ஒற்றையர் பை L 3-4
(சியு ஹாங் லாம் - ஹாங்காங்)
முன்னேறவில்லை
சரத் கமல் பை W 4-2
(தியாகோ அபோலோனி - போர்ச்சுக்கல்)
L 1-4
(மா லாங் - சீனா)
முன்னேறவில்லை
மணிகா பத்ரா பெண்கள் ஒற்றையர் பை W 4-0
(டின் டின்-ஹோ - கிரேட் பிரிட்டன்)
W 4-3
(மார்கரீட்டா பெசோட்ஸ்கா - உக்ரைன்)
L 0-4
(சோபியா பொல்கனோவா - ஆஸ்திரியா)
சுதிர்தா முகர்ஜி W 4-3
(லிண்டா பெர்க்ஸ்ட்ராம் - சுவீடன்)
L 0-4
(ஃபு யு - போர்ச்சுக்கல்)
முன்னேறவில்லை
சரத் கமல் மிக்ஸ்டு இரட்டையர் N/A L 0-4
சீன தாய்பே
முன்னேறவில்லை
மணிகா பத்ரா

டாஸில் சர்விஸ் முடிவு செய்யப்படும். நான்கு புள்ளிகள் எடுத்தால் ஒரு கேம் வெற்றிகொண்டதாக பொருள். இவ்வாறு 6 கேம்ஸை யார் முதலில் வென்றார்களோ அவர்கள் ஒரு சுற்றை(set) வென்றவர் ஆவார். மூன்று சுற்றுகளில் இரண்டை வெல்பவரே ஆட்டத்தை வென்றவர்.

.

போட்டியாளர் நிகழ்வு 64 சுற்று 32 சுற்று சுற்று 16 கால் இறுதி அரை இறுதி பதக்கப்போட்டி
மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) ரேங்க்
சானியா மிர்ஷா பெண்கள் இரட்டையர் N/A L 1-2
உக்ரைன்
முன்னேறவில்லை
அங்கிதா ரெய்னா
சுமித் நகல் ஆண்கள் ஒற்றையர் W 2-0
(டெனிஸ் இஸ்டோமின் - உஸ்பெகிஸ்தான்)
L 0-2
(டேனில் மிடிடேவ் - ரஷியா)

பளுதூக்குதலில் இரண்டு சுற்றுக்கள் உள்ளன. அவை ஸ்நாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க். இவ்விரண்டு சுற்றுகளில் வீரர்/வீராங்கனைகள் தலா மூன்று முறை பளு தூக்க வேண்டும். ஸ்நாட்ச்-ல் மூன்றில் ஏதேனும் ஒரு முறை சரியாக தூக்கவில்லை என்றால் தேர்வாகமாட்டார். ஸ்நாட்ச்-ல் போட்டியாளர் பளுவை ஒரே தூக்காக தூக்க வேண்டும், கிளீன் அண்ட் ஜெர்க்-ல் பளுவை முதலில் மார்பருகே வைத்தால் அது கிளீன், பின்பு கைகள் நடுங்காமலும் கால்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கையில் பளுவை தலைக்கு மேல் தூக்கினால் அது ஜெர்க். மேலும் சிக்னல் தரும் வரை பளுவை தூக்கியே வைக்க வேண்டும். இவ்விதிகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் அந்த attempt கணக்கில் எடுத்து கொள்ளப்படாது.

போட்டியாளர் நிகழ்வு ஸ்னாட்ச் கிளீன் & ஜெர்க் மொத்தம் ரேங்க்
முடிவு ரேங்க் முடிவு ரேங்க்
மீராபாய் சானு சாய்கோம் பெண்கள் 49 கிலோ 87 2 115 2 202 2

தலா மூன்று நிமிடங்கள் கொண்ட இரு சுற்றுகளில் அதிக புள்ளிகள் பெறும் வீரர் வெற்றியாளர். இரு வீரருக்கும் 8 புள்ளிகள் வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் போட்டி முடியாமலேயே வெற்றியாளர் தேர்வுசெய்யப்படுவார். மேட்டை (mat) விட்டு வெளியே தள்ளினால் ஒரு புள்ளி. எதிரியின் முதுகுப்படும்படி மேட்டில் தள்ளினால் இரண்டு புள்ளிகள். நிற்கும் எதிரியை வெளியில் தள்ளினால் நான்கு புள்ளிகள். பெரும் வீச்சளவு கொண்டு எதிரியை தள்ளினால் ஐந்து புள்ளிகள்.

கிரேகோ ரோமன்

உடம்பின் மேல்புறம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கால்கள் பயன்படுத்த கூடாது.

ஃப்ரீஸ்டைல்

கிரேகோ ரோமனில் உள்ள எந்த கட்டுப்பாடுகளுக்கும் உட்படாத ஆட்டம்தான் ஃபிரிஸ்டைல்.

போட்டியாளர் நிகழ்வு 16 சுற்று கால் இறுதி அரை இறுதி ரெபிசார்ஜ் பதக்கப்போட்டி
மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) மமுடிவு (எதிர்போட்டியாளர்) ரேங்க்
ரவிக்குமார் தஹியா ஆண்கள் 57 கிலோ W 13-2
(ஆஸ்கர் ஈட்வர்டோ - கொலம்பியா)
W 14-4
(ஜார்ஜி வான்கெலோவ் - பல்கேரியா)
W 7-9
(நுரிஸ்லம் சனாயேவ் - கஜகஸ்தான்)
N/A L 4-7
(ஜவுர் உகீவ்- ரஷ்யா)
2
பஜ்ரங் புனியா ஆண்கள் 65 கிலோ W 3-3
(எர்னாஸர் அக்மாட்டாலிவ்- கிர்கிஸ்தான்)
W 2-1
(மோர்ட்டேசா சியாசி செகா- ஈரான்)
L 5-12
(ஹாஜி அலியேவ்- அஜர்பைஜான்)
N/A W 8-0
(டவ்லத் நியாஸ்பெகோவ் - கஜகஸ்தான்)
3
தீபக் புனியா ஆண்கள் 86 கிலோ W 12-1
(எக்ரெகெமே அஜியோமோர் - நைஜீரியா)
W 6-3
(ஜுஷென் லின் - சீனா)
L 0-10
(டெய்லர் - அமெரிக்கா)
பை L 2-4
( நஸீம் அமின்- சான் மரினோ)
5
சீமா பிஸ்லா பெண்கள் 50 கிலோ L 1-3
(சாரா ஹம்தி - துனிசியா)
வினேஷ் போகாத் பெண்கள் 53 கிலோ W 7-1
(சோபியா மேக்டலினா- ஸ்வீடன்)
L 3-9
(வனேசா கலாட்ஜின்ஸ்கயா-பெலாரஸ்)
முன்னேறவில்லை
அன்சு மாலிக் பெண்கள் 57 கிலோ L 2-8
(இரினா குரச்கினா - பெலாரஸ்)
முன்னேறவில்லை L 1-5
(வளரியா கோப்லோவா- ரஷ்யா)
சோனம் மாலிக் பெண்கள் 62 கிலோ L 2-2
(குரேல்குஃக்லின் போலோர்டுயா - மங்கோலியா)
முன்னேறவில்லை
Share it